அரிசி மாஃபியாவின் முறைகேடான செயற்பாடு

user 08-Dec-2024 இலங்கை 1013 Views

ஜனவரி மாதம் முதல் 04 வகையான அரிசிகளுக்கான விலைக் கட்டுப்பாடுகள் கடுமையாக அமுல்படுத்தப்பட வேண்டுமென தேசிய அரிசி கைத்தொழில் சம்மேளனத்தின் அருணகாந்த பண்டார தெரிவித்துள்ளார்.

ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அவர், அரிசி மாஃபியா எவ்வாறு செயல்படுகிறது என்பது தொடர்பில் விளக்கமளித்தார்.

"இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை, பிரதான அரிசி ஆலைகள் கீரி சம்பா விலையை உயர்த்துகின்றன.

கீரி சம்பாவின் விலை உயர்ந்தவுடன், அடுத்த பருவத்தில் கீரி சம்பாவை சாகுபடி செய்ய விவசாயிகள் முயற்சி செய்கின்றனர்.

விலை குறைவாக இருக்கும்போதே, ​​ஆலை உரிமையாளர்கள் களஞ்சியசாலைகளை நிரப்பி வைத்துவிடுவர்.

அப்படி நிரப்பி மிக அதிக விலைக்கு விற்பனை செய்வர்.

இந்த முக்கிய ஆலை உரிமையாளர்கள் அதிகாரிகளின் உதவியுடன் நிலைமையின் சமநிலையை உடைக்கிறார்கள்.

எனவே இந்த நிலையில் நாட்டு அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

எனவே 04 வகை அரிசிகளுக்கும் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் கட்டுப்பாட்டு விலை கடுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும்."  

Related Post

பிரபலமான செய்தி