பிரித்தானியாவில் AI தொழில்நுட்பத்திற்கு எதிராக புதிய சட்டம் !

user 03-Feb-2025 சர்வதேசம் 148 Views

பிரித்தானியாவில் குழந்தைகளை தவறான முறையில் காட்டக்கூடிய செயற்கை நுண்ணறிவு(Artificial Intelligence - AI) தொழில்நுட்ப மென்பொருட்கள் மற்றும் வலைத்தளங்களை தடை செய்வதற்கு புதிய சட்டமொன்றை பிரித்தானிய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

இவ்வாறானதொரு சட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வரும் முதல் நாடாக பிரித்தானியா அமையவுள்ளது.

கடந்த ஆண்டு AI மூலம் உருவாக்கப்பட்ட குழந்தைகளை தவறான முறையில் சித்தரிக்கும் புகைப்படங்கள் 2023ஆம் ஆண்டை விட ஐந்து மடங்கு அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தைகளின் உண்மையான புகைப்படங்களை தவறான முறையில் மாற்றி வடிவமைக்கும் இவ்வாறான தொழில்நுட்பம் மனிதவியலுக்கும், சமூக நலத்திற்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது.

இந்நிலையில், இவ்வாறான புகைப்படங்களை உருவாக்கக்கூடிய மென்பொருட்கள் மற்றும் வலைத்தளங்களை முடக்க புதிய அதிகாரங்களை பிரித்தானிய அரசாங்கம் பெற உள்ளது.

முன்னதாக, 'Deepfake' தொழில்நுட்பத்தின் மூலம் புகைப்படங்களை தவறான முறையில் மாற்றியமைப்பது பிரித்தானியாவில் குற்றமாக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

Related Post

பிரபலமான செய்தி