பிரித்தானியாவில் நினைவு கூரப்படவுள்ள மாவை சேனாதிராஜா !

user 27-Feb-2025 இலங்கை 98 Views

தமிழரசுக் கட்சியின் மறைந்த மூத்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் (Mavai Senathirajah) 31 ஆவது நாள் நினைவஞ்சலி பிரித்தானியாவில் அனுஷ்டிக்கப்படவுள்ளது.

இந்த நிகழ்வானது, ஹெரொவ் ஆர்ட்ஸ் சென்டரில் (Harrow Arts Centre) எதிர்வரும் 28 ஆம் திகதி (நாளை மறுநாள்) முன்னெடுக்கப்படவுள்ளது.

அதன்படி, குறித்த திகதியில், பிற்பகல் 6.30 முதல் 9.30 வரை மறைந்த அரசியல் தலைவர் மாவைக்கான அஞ்சலிகளை செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறானதொரு பின்னணியில், இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தனது 82 ஆவது வயதில் கடந்த ஜனவரி மாதம் 30 ஆம் திகதி காலமானார்.

உடல் நலக்குறைவால் யாழ். போதனைா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது. 

Related Post

பிரபலமான செய்தி