யாழ். தையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டம் !

user 11-Feb-2025 இலங்கை 169 Views

யாழ்ப்பாணம் - தையிட்டி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள விகாரை தொடர்பில் பூர்வீக காணி உரிமையாளர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள போராட்டத்துக்கு முழுமையான ஆதரவை வழங்கவுள்ளதாக ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி தெரிவித்துள்ளது.

ஐனநாயக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கிடையிலான கலந்துரையாடல் ஒன்று வவுனியாவில் இன்று இடம்பெற்றது.

அதன்பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் முக்கியஸ்தரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் இதனைத் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் தையிட்டி விகாரை உடைக்கப்பட வேண்டும்.

வடகிழக்கில் பிக்குகள் மற்றும் சில திணைக்களங்கள் நினைத்ததைச் செய்யும் ஒரு நிலை காணப்படுகின்றது.

எனவே இந்த விகாரையை அகற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

Related Post

பிரபலமான செய்தி