இந்தியப் பயணிகள் பண்டிகைக் காலங்களில் அதிகம் விரும்பும் சர்வதேச சுற்றுலா நாடுகளின் பட்டியலில் இலங்கை முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது. இது தொடர்பாக Make My Trip என்ற இணையத்தளம் வெளியிட்ட ஆய்வறிக்கையிலேயே தெரியவந்துள்ளது.
இந்தியப் பயணிகள் அதிகம் முன்பதிவு செய்த நாடுகள் வரிசையில் இலங்கை மூன்றாமிடத்தில் உள்ளதுடன், குறித்த வரிசையில் தாய்லாந்து முதலாமிடத்தில் உள்ளது. ஐக்கிய அரபு இராச்சியம் இரண்டாமிடத்தில் உள்ளதுடன், இலங்கையைத் தொடர்ந்து வியட்நாம் நான்காவது இடத்தில் உள்ளதாக அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் கடந்த காலங்களை விட வியட்நாம் நோக்கிய பயண ஆர்வம் இந்தியர்களிடையே வெகுவாக அதிகரித்துள்ளதாக அந்த அறிக்கை குறிப்பிடுகின்றது.