உச்சம் தொட்ட பச்சை மிளகாய் விலை!

user 06-Jan-2025 இலங்கை 742 Views

சந்தையில் ஒரு கிலோ கிராம் பச்சை மிளகாய் 1000 ரூபாவுக்கும் அதிகமாக விற்பனை செய்யப்படுவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, நாடளாவிய ரீதியில் மரக்கறிகளின் விலை சடுதியாக அதிகரித்துள்ளதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே மழையின் தாக்கத்தால் மரக்கறிகளின் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் குறிப்பிடுகின்றனர்.

எனினும் கெப்பெட்டிபொல விசேட பொருளாதார மத்திய நிலையத்திற்கு கொண்டு வரப்படும் மரக்கறிகளை விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் கூறியுள்ளனர்.

மேலும் மரக்கறிகளுக்கு உரிய விலை கிடைப்பதில்லை எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Related Post

பிரபலமான செய்தி