புதுமணத் தம்பதிகளுக்கு அரசின் மகிழ்ச்சி செய்தி !

user 11-Feb-2025 இலங்கை 170 Views

 இலங்கையில் (Srilanka) புதிதாக திருமணமான தம்பதிகளுக்கு வீடு கட்ட கடன் வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

இந்த வீட்டுத்திட்டம் ஒரு முன்னோடி திட்டமாக ஆரம்பிக்கப்படும் என்று நகர்ப்புற மேம்பாடு, கட்டுமானம் மற்றும் வீட்டுவசதி மேம்பாட்டு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

குறித்த விடயத்தை நகர்ப்புற மேம்பாடு, கட்டுமானம் மற்றும் வீட்டுவசதி மேம்பாட்டு அமைச்சின் செயலாளர் ரஞ்சித் ஆரியரத்ன (Ranjith Ariyaratne) தெரிவித்துள்ளார்.

எனினும், வீடு கட்டுவதற்கு எவ்வளவு தொகை வழங்க வேண்டும் என்பது குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை என்று செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், அந்த வீட்டுக் கடன்கள் வேலையில்லாதவர்களுக்கு வழங்கப்படவுள்ளதாகவும் ரஞ்சித் ஆரியரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் அதற்கான கடன் தொகை அரசு வங்கிகளால் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Related Post

பிரபலமான செய்தி