அமெரிக்க அதிபர் ட்ரம்பை சந்தித்த பிரதமர் மோடி !

user 14-Feb-2025 இந்தியா 156 Views

பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை (Donald Trump) இந்திய பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) சந்தித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்க நேரப்படி வியாழக்கிழமை பிற்பகல் 4 மணிக்கு ( இலங்கை நேரப்படி வெள்ளிக்கிழமை அதிகாலை 2.30 மணி) ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துள்ளார்.

வெள்ளை மாளிகைக்கு சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.

வர்த்தகம், வரிக் கொள்கைகள், சட்டவிரோத குடியேற்றம் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்தியுள்ளனர்.

பிரான்ஸ் சுற்றுப் பயணத்தை நிறைவு செய்த பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் அமெரிக்காவுக்கு சென்றார்.

தலைநகர் வொஷிங்டனில் உள்ள விமானப் படை தளத்தில் தரையிறங்கிய அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதிகாலை நேரத்தில் கடும் குளிரை பொருட்படுத்தாமல் இந்திய வம்சாவளியினர் திரண்டு வந்து அவரை உற்சாகமாக வரவேற்றனர்.

அங்கிருந்து அமெரிக்க ஜனாதிபதி மாளிகையில் உள்ள விருந்தினர் இல்லமான பிளேர் ஹவுஸுக்கு பிரதமர் மோடி காரில் சென்றார். உலகின் முக்கிய தலைவர்கள் மட்டுமே பிளேர் ஹவுஸில் தங்க வைக்கப்படுகின்றனர்.

அமெரிக்க நேரப்படி வியாழக்கிழமை பிற்பகல் 4 மணிக்கு (இலங்கை நேரப்படி வெள்ளிக்கிழமை அதிகாலை 2.30 மணி ) ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேசினார்.

இருவரும் பரஸ்பரம் கைகுலுக்கி, கட்டியணைத்து ஒருவரை ஒருவர் நலம் விசாரித்து விட்டு, 45 நிமிடங்கள் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினர்.

குறிப்பாக பாதுகாப்பு, வர்த்தகம் தொடர்பாக முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Post

பிரபலமான செய்தி