கனடாவில் விமானம் தலைகீழாக கவிழ்ந்ததில் கோர விபத்து !

user 18-Feb-2025 சர்வதேசம் 133 Views

கனடாவின் டொராண்டோவில் தரையிறங்க முற்பட்ட விமானம் கவிழ்ந்ததில் 15 பேர் வரை காயமடைந்துள்ளதோடு 3 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

குறித்த விமானம், மினசோட்டாவிலிருந்து பயணித்துள்ள நிலையில், நேற்று(17.02.2025) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதனையடுத்து, விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதோடு அவசர உதவி குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன.

இதன்போது, விமானத்தில் பயணித்த 80 பேரும் வெளியேற்றப்பட்டதாக அமெரிக்க ஃபெடரல் ஏவியேஷன் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும், அனைத்து பணியாளர்கள் மற்றும் பயணிகளையும் கணக்கெடுத்ததாக விமான நிலையம் தகவல் வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், விமானத்தில் பயணித்த பெரும்பாலான பயணிகள் பாதுகாப்பாக இருப்பதாக கனேடிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், விபத்து தொடர்பான விசாரணைகளையும் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Related Post

பிரபலமான செய்தி