வீடொன்றுக்குள் மிளகாய் தூள் பூசப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு..

user 25-Oct-2025 இலங்கை 23 Views

மினுவாங்கொட, யட்டியான பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சந்தேகத்திற்கிடமான முறையில் பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மினுவாங்கொட பொலிஸ் நிலையத்திற்கு நேற்று மதியம் கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.

உயிரிழந்தவர் மினுவாங்கொட, யட்டியான பகுதியைச் சேர்ந்த 71 வயதுடையவராகும்.

 

இந்த சந்தேகத்திற்கிடமான மரணம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், உயிரிழந்த பெண்ணின் உடலில் மிளகாய் தூள் பூசப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

எனினும், மரணம் நடந்த விதம் குறித்த விபரங்கள் இன்னும் வெளியாகவில்லை.

பிரேத பரிசோதனைக்காக சடலம் கம்பஹா மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மினுவாங்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Related Post

பிரபலமான செய்தி