பாடகர் கே.ஜே.யேசுதாஸ் வைத்தியசாலையில் அனுமதி !

user 27-Feb-2025 இந்தியா 105 Views

பிரபல பாடகர் கே.ஜே.யேசுதாஸ்(K. J. Yesudas) உடல்நலக் குறைவு காரணமாகச் சென்னையில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தன்னுடைய தனித்துவமான குரல் வளத்தால் உலக அளவில் பிரபலமானவர் இவர் மலையாளம், தெலுங்கு, தமிழ், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி உள்ளார்.

80 மற்றும் 90களில் இவரது குரலில் வெளிவந்த பாடல்கள் இன்றளவும் ரசிகர்களின் மனதைக் கொள்ளை கொண்டுள்ளது.

இந்த நிலையில், பிரபல பாடகர் கே.ஜே. யேசுதாஸ்  உடல்நலக் குறைவால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், அவர் தற்போது நலமோடு இருப்பதாகவும் சிகிச்சை நிறைவடைந்த பின்னர் வீடு திரும்பவுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

Related Post

பிரபலமான செய்தி