மன்னார் வைத்தியசாலை இளம் தாய் சிந்துஜாவின் மரணம் !

user 20-Nov-2024 இலங்கை 164 Views

மன்னார் வைத்தியசாலையில் மரணமடைந்த இளம் தாய் சிந்துஜாவின் மரணம் தொடர்பாக காவல்துறையினரால் விசாரணைகள் மந்தகதியில் இடம் பெற்றுள்ளமை  நீதிமன்ற விசாரணையில் தெரியவந்துள்ளது.

மன்னார் மடுபகுதியை சேர்ந்த இளம் தாய் சிந்துஜா மன்னார் வைத்தியசாலையில் மரணமடைந்த நிலையில் குறித்த மரணம் தொடர்பில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் மற்றும் பெற்றோர்கள் முறைபாடு செய்தனர்.

இந்நிலையில், சிந்துஜாவின் மரணம் தொடர்பிலான வழக்கு விசாரணை நேற்றையதினம்(19) செவ்வாய்கிழமை மன்னார் நீதவான் நீதி மன்றத்தில் அழைக்கப்பட்டது.

இதன் போது சில நாட்களுக்கு முன்பாக தான் குறித்த வழக்கு மன்னார் பிராந்திய குற்றத்தடுப்பு காவல்துறையினருக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மன்னார் குற்றத்தடுப்பு காவல்துறையினர் மன்றில் தெரிவித்திருந்தனர்.

இது வரை காலமும் மன்னார் மடு காவல்துறையினர் குறித்த வழக்கு விசாரணையை B வழக்காக பதிவு செய்யாது சாதாரண வழக்காக பதிவு செய்து விசாரணைகளை நடத்தியுள்ளனர்.

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பெண் சார்பாக நீதிமன்றத்தில் முன்னிலையான சட்டத்தரணி டெனிஸ்வரன் மற்றும் சர்மிலன் டயசின் கோரிக்கையை ஏற்று குறித்த வழக்கு தொடர்பிலான விசாரணையை துரிதப்படுத்தி இரண்டு வார காலத்திற்குள் அறிக்கை சமர்பிக்குமாறும் அதே நேரம் வழக்கை B அறிக்கையாக தாக்கல் செய்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

குறித்த வழக்கு மேலதிக விசாரணைக்காக டிசம்பர் மாதம் 3 திகதி தவணையிடப்பட்டுள்ளது.

மன்னார் வைத்தியசாலையில் ஜீலை மாதம் 28 ஆம் திகதியளவில் அதிக குருதி போக்கு காரணமாக குழந்தையைப் பிரசவித்த 27 வயதான மரியராஜ் சிந்துஜா என்ற பட்டதாரி பெண், உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

 

 

 

 

Related Post

பிரபலமான செய்தி