சீரின்றி காணப்படும் வீதிகள் !

user 16-Jan-2025 இலங்கை 363 Views

முல்லைத்தீவு - முள்ளியவளை மேற்கு நாவலர் வீதியில் வசிக்கும் மக்கள் வீதிகள் சரியான முறையில் புனரமைக்கப்படாமையால் பல அசௌகரியங்களுக்கு முகம்கொடுப்பதாக கூறி போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.

முல்லைத்தீவு முள்ளியவளை மேற்கு நாவலர் வீதி 1,2,3 குறுக்கு வீதிகள் 50 வருடங்களுக்கு மேலாக புனரமைக்கப்படாததனால் அண்மைய மழை காலங்களில் மழைநீர் தேங்கி நிற்கின்றதோடு குறித்த பகுதியில் அமைக்கப்பட்ட பாலமும் சீராக அமைக்கப்படவில்லை .

இதனால் மழைக்காலங்களில் வெள்ள நீர் தேங்கி நிற்பதோடு, நீர் அதிகரிக்கும் சந்தர்ப்பங்களில் வீட்டுக்குள் புகுந்துள்ளது. இதனால் குறித்த பகுதியில் வாழுகின்ற மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்தோடு குறித்த வீதி 50 வருடங்களுக்கு மேலாக சீரின்றி காணப்படுவதோடு அவசர நிலமைகளின் போது கூட பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. முள்ளியவளை மேற்கு நாவலர் வீதி 1,2,3 குறுக்கு வீதிகளில் வசிக்கும் மக்கள் மழைக்காலங்களில் மட்டுமல்ல ஏனைய காலங்களிலும் குறித்த வீதி குன்றும் குழியுமாகவே காணப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதனால் குறித்த வீதியில் பயணம் செய்யும் அரச ஊழியர்கள், பாடசாலை மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள், வாகன சாரதிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் பல்வேறு பல வருடமாக இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். 

 

 

 

Related Post

பிரபலமான செய்தி