பிரான்சின் மிகவும் பரபரப்பான முனையத்திற்குச் செல்லும் ரயில் தண்டவாளத்தில் இரண்டாம் உலகப் போரின் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, பாரிஸ் கரே டு நோர்ட் ரயில் நிலையத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
செயிண்ட் டெனிஸ் புறநகர்ப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பராமரிப்புப் பணிகளின் போது, வெடிக்காத குண்டு “தண்டவாளத்தின் நடுவில்” கண்டுபிடிக்கப்பட்டதாக தேசிய SNCF ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து யூரோஸ்டார் ரயில்கள், அதிவேக மற்றும் உள்ளூர் சேவைகளை வழங்கும் ரயில் நிலையத்திற்கான அனைத்து போக்குவரத்தும் முடக்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து மீட்கப்பட்ட குண்டை செயலிழக்கம் செய்யும் பணிகளில் பாரிஸ் காவல்துறையினர் ஈடுபட்டனர்.
கரே டு நோர்ட் ரயில் நிலையம் பாரிஸின் வடக்கே அமைந்துள்ளது.
நாட்டின் மிகவும் பரபரப்பான ரயில் முனையமாகும்.
இது ஒவ்வொரு நாளும் 700,000 பயணிகளுக்கு சேவை செய்கிறது என்று SNCF தெரிவித்துள்ளது.