அறநெறி பாடசாலை ஆசிரியர்களால் குகதாசனுக்கு கிடைத்த வரவேற்பு !

user 21-Nov-2024 இலங்கை 223 Views

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட திருக்கோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கதிரவேலு சண்முகம் குகதாசனுக்கு 18 அறநெறிப் பாடசாலைகளைச் சேர்ந்த ஆசிரியர்களால் வரவேற்பு நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வு, மூதூர் சகாய புறத்தில் நேற்று (20.11.2024) இடம்பெற்றுள்ளது.

அத்துடன், இந்து மன்றத் தலைவர் தவத்திரு பாஸ்கரன் குருக்கள் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றுள்ளது.

இதன்போது, 18 அறநெறிப் பாடசாலைகளில் பாடம் புகட்டும் 50க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டதுடன், மேற்படி பாடசாலைகளில் காணப்படும் குறைபாடுகளை குகதாசன் கேட்டறிந்துள்ளார்.

அத்துடன், அவற்றுக்கான தீர்வுகளை மிக விரைவில் பெற்றுத் தருவதாக உறுதியளித்துள்ளார்.

 

 

 

Related Post

பிரபலமான செய்தி