பதுளை மாவட்டத்தில் தனித்தும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் கூட்டிணைந்தும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் போட்டியிடவுள்ளது.
பதுளை மாவட்டத்தில் உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்பு மனுவை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் தாக்கல் செய்துள்ளார்.
குறித்த வேட்புமனு நேற்று(20.03.2025) தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பதுளை மாவட்டத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஹாலிஎல, சொர்னாதொட்ட, மீஹாகுல்ல, பண்டாரவளை, எல்ல, வெலிமடை, ஊவா பரனகம ஆகிய இடங்களில் சேவல் சின்னத்தில் போட்டியிடவுள்ளது.
இதேவேளை, பதுளை பசறை, ஹப்புதலை, ஹல்துமுல்ல ஆகிய இடங்களில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்டிணைந்து தொலைபேசி சின்னத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் போட்டியிடுகின்றது.