பலாலி விமான நிலையம் ஊடாக பயணிப்போருக்கு முக்கிய அறிவிப்பு !

user 04-Dec-2024 இலங்கை 205 Views

யாழ்ப்பாணம், பலாலி சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக பயணிப்பவர்கள், அங்குள்ள அதிகாரிகளால் ஏதாவது அசௌகரியங்களை எதிர்கொண்டால் அது தொடர்பாக முறைப்பாடு செய்ய புதிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இதற்கமைய, '0774653915' என்ற இலக்கத்துக்கு அழைத்து விமான நிலையத்தின் செயற்பாட்டு முகாமையாளர் அமரதுங்க என்பவரை தொடர்புகொள்ள முடியும்.

அல்லது, '021 221 9373' என்ற இலக்கத்துக்கு அழைத்து வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் முறைப்பாட்டினை பதிவு செய்ய முடியும்.

மேற்குறிப்பிட்ட தொலைபேசி இலக்கங்களை வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அறிமுகப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Post

பிரபலமான செய்தி