ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின்(Lasantha Wickrematunge) வாகன ஓட்டுநர் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக மூன்று சந்தேக நபர்களை விடுதலை செய்யும் சட்டமா அதிபரின் முடிவு தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் தற்போது எழுந்துள்ளன.
இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் அதேநேரம் தமிழர் தாயகங்களில் படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் இசைப்பிரியாவின் மரணம் தொடர்பிலும் விசாரணைகளை முன்னெடுக்குமாறு தமிழ் அரசியல் முக்கியஸ்தர்களால் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினது தலைவரின் மகன் பாலச்சந்திரனது மரண செய்திகெட்டு தான் துயரமடைந்ததாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ஊடகவியலாளர் இசைப்பிரியா மற்றும் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினது தலைவரின் மகன் பாலச்சந்திரனது மரணம் தொடர்பில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ்(Saroja Savithri Paulraj) குறிப்பிட்டுள்ளார்.
இதுவொரு இலகுவான விடயம் அல்ல என்றும் தெரிவித்தார்.