இலங்கை பெருந்தோட்டத்துறை பெரும் ஆபத்தில் இருப்பதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
ஊழியர்களுக்கான பட்ஜெட் நிவாரண கொடுப்பனவு திருத்த மசோதா மற்றும் ஊழியர்களுக்கான தேசிய குறைந்தபட்ச ஊதிய திருத்த மசோதா உள்ளிட்ட மூன்று மசோதாக்கள் இன்று (22) நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
குறித்த விவாதத்தில் ஐக்கிய மக்கள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானகே உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ரணில் விக்ரமசிங்க காலத்தில் பெருந்தோட்டத்துறைக்கான இரசாயனங்கள் பாவனை தடையால் இத்துறை பெரும் பாதிப்பை சந்தித்தது.
இந்த அரசாங்கம் வழங்கும் நிவாரணங்களுக்கு நான் நன்றி தெரிவிக்கிறேன்.
அத்தோடு கடந்த அரசில் 10 வீதம் இருந்த வருமான வரி 100வீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதனால் தொடர்ச்சியாக இத்துறை நட்டத்தில் இயங்குகிறது.
இந்நிலை தொடர்ந்தால் பெருந்தோட்டத்துறையை நம்பியிருப்போர் சொல்லொணா துயரங்களுக்கு முகம் கொடுப்பர். இது வரை தேயிலை தொழிற்சாலைகள் 220 மூடப்பட்டுள்ளன.
அதனால் தேயிலைக்கு பயன்படுத்தப்படும் இரசாயன பசளைக்கான வற்வரியை குறைத்தாவது இத்துறையை பாதுகாக்குமாறு கேட்டுக் கெள்கிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.