திருகோணமலை - மூதூர் பட்டித்திடலைச் சேர்ந்த 8 வயது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை...

user 30-Jul-2025 இலங்கை 261 Views

திருகோணமலை - மூதூர் பட்டித்திடலைச் சேர்ந்த தந்தை ஒருவர் தனது 8 வயதான மகளை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

மகளை துஷ்பிரயோகம் செய்ததாக குறித்த பிள்ளையின் தாயால் மூதூர் பொலிஸ் நிலையத்தில் பல நாட்களுக்கு முன்னர் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

எனினும் குறித்த நபர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தாய் தெரிவித்துள்ளார்.

குறித்த நபரை கைது செய்யக்கோரி பல தரப்பில் இருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டதனாலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

குறித்த சிறுமி திருகோணமலை வைத்தியசாலையில் தாயால் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

Related Post

பிரபலமான செய்தி