நுவரெலியா – பதுளை பிரதான வீதி போக்குவரத்து பாதிப்பு

user 27-May-2025 இலங்கை 217 Views

நுவரெலியா பகுதியில் பெய்த கனமழையுடன் கூடிய பலத்த காற்று காரணமாக பெரியளவிலான சைப்ரஸ் மரங்கள் முறிந்து விழுந்ததால், இன்று (27) அதிகாலை நுவரெலியா-பதுளை பிரதான வீதியின் போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

பின்னர், முறிந்து விழுந்த மரங்களை பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து வெட்டி அகற்றிய பின்னர் போக்குவரத்து ஒரு வழிப்பாதையாக மட்டுப்படுத்தப்பட்டதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் பிரதான வீதிகள் மற்றும் சிறிய வீதிகளில் வாகனம் செலுத்தும் போது எச்சரிக்கையுடன் வாகனங்களை ஓட்டுமாறு பொலிஸார் சாரதிகளுக்கு வலியுறுத்துகின்றனர்.

Related Post

பிரபலமான செய்தி