ரூபாவின் பெறுமதி மேலும் அதிகரிப்பு!

user 28-Feb-2025 இலங்கை 376 Views

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியானது நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (28) மேலும் அதிகரித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரங்களுக்கு அமைவாக,

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும் விற்பனை பெறுதியானது இன்று முறையே 291.19 ரூபாவாகவும், 299.73 ரூபாவாகவும் உள்ளது.

நேற்றைய தினம் (27) அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும் விற்பனை பெறுதியானது முறையே 291.40 ரூபாவாகவும், 299.98 ரூபாவாகவும் காணப்பட்டிருந்தது.

மத்திய கிழக்கு உட்பட ஏனைய பிரதான நாடுகளின் நாணயங்களுக்கு நிகராகவும் ரூபாவின் பெறுமதி இன்று உயர்ந்துள்ளது.

Related Post

பிரபலமான செய்தி