கிளிநொச்சி - பரந்தன் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்து

user 31-Jul-2025 இலங்கை 108 Views

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பரந்தன் பகுதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் பெண் ஒருவர் பலியாகியுள்ளார்.

குறித்த விபத்தானது இன்று (31.07.2025) காலை இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கிளிநொச்சி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த பெண் ஒருவரை பின்னால் வந்த டிப்பர் முந்திச்செல்ல முற்பட்ட வேளையே விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், விபத்து இடம்பெற்ற இடத்தில் விபத்தை ஏற்படுத்திய சாரதி பொதுமக்களால் தாக்கப்பட்ட நிலையில் பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

விபத்தில் கிளிநொச்சி உமையாள்புரம் பகுதியைச் சேர்ந்த சந்திரசேகரம் யதுகிரி என்ற பெண்ணே 28 வயதானவரே உயிரிழந்துள்ளார்

 

சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Related Post

பிரபலமான செய்தி