சிரியாவில் வெடித்த உள்நாட்டு பதற்றம் காரணமாக நாட்டை விட்டு தப்பியோடிய அந்நாட்டு ஜனாதிபதி பஷர் அல்-அசாத்திற்கு, ரஷ்யா தஞ்சமளித்துள்ளதாக கிரெம்ளின் மாளிகை கூறியுள்ளது.
இந்நிலையில் அவர் தற்போது தனது குடும்பத்துடன் அங்கே தஞ்சமடைந்திருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்படி விளாடிமிர் புடின் தனிப்பட்ட முறையில் அசாத்திற்கு தஞ்சமளித்ததாக கிரெம்ளின் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக புடினின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறுகையில்,
"அரசு தலைவர் இல்லாமல் இதுபோன்ற முடிவுகளை எடுக்க முடியாது. இது அவரது முடிவு. ஜனாதிபதி அசாத் இருக்கும் இடத்தைப் பொறுத்தவரை, நான் உங்களிடம் எதுவும் கூற முடியாது.
ஆட்சிக் கவிழ்ப்பு என்பது உலகம் முழுவதையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது, இந்த விடயத்தில் நாங்கள் விதிவிலக்கல்ல" என தெரிவித்துள்ளார்.