ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சூடு..

user 15-May-2025 சர்வதேசம் 151 Views

ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தின் டிரால் பகுதியில் அமைந்துள்ள நாதிர் கிராமத்தில் இன்று (15) அதிகாலை இந்திய பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகளுடன் பரஸ்பர துப்பாக்கிப் பிரயோகத்தை முன்னெடுத்துள்ளனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் பயங்கரவாதி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

48 மணி நேரத்திற்குள் யூனியன் பிரதேசத்தில் நடக்கும் இரண்டாவது என்கவுன்டர் இதுவாகும்.

ஜெய்ஷ்-இ-மொஹமட் அமைப்பைச் சேர்ந்த மேலும் இரண்டு முதல் மூன்று பயங்கரவாதிகள் அந்தப் பகுதியில் சிக்கியிருப்பதாக நம்பப்படுகிறது.

மேலும், தொடர்ச்சியான தேடல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இந்திய பாதுகாப்பு வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

ஷோபியன் மாவட்டத்தின் கெல்லர் பகுதியில் நடந்த ஒரு அதிரடி நடவடிக்கையில் பாதுகாப்புப் படையினர் மூன்று லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்ற இரண்டு நாட்களுக்குப் பின்னர் இந்த சம்பவம் வந்துள்ளது.

செவ்வாய்க்கிழமை (13) கொல்லப்பட்ட மூன்று பயங்கரவாதிகளில், இரண்டு பயங்கரவாதிகள் ஷாஹித் குட்டாய் மற்றும் அட்னான் ஷாஃபி என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

 

இருவரும் சோபியானைச் சேர்ந்தவர்கள்.

2023 ஆம் ஆண்டு லஷ்கரில் இணைந்த குட்டாய், கடந்த ஆண்டு ஏப்ரல் 8 ஆம் திகதி டேனிஷ் ரிசார்ட்டில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஈடுபட்டார்.

இதில் இரண்டு ஜெர்மன் சுற்றுலாப் பயணிகள் மற்றும் ஒரு சாரதி காயமடைந்தனர்.

கடந்த ஆண்டு மே மாதம் ஷோபியானில் உள்ள ஹீர்போராவில் பாஜக சர்பஞ்ச் ஒருவரைக் கொன்றதிலும் அவருக்கு தொடர்பு இருப்பதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

2024 ஆம் ஆண்டு பயங்கரவாதக் குழுவில் சேர்ந்த ஷாஃபி, ஷோபியனில் உள்ள வாச்சியில் உள்ளூர்வாசி அல்லாத ஒரு தொழிலாளியைக் கொன்றதில் ஈடுபட்டதாக வட்டாரங்கள் தெரிவித்தன.

ஷோபியனில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடமிருந்து மூன்று ஏகே-47 துப்பாக்கிகள் மற்றும் பிற ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Post

பிரபலமான செய்தி