முல்லைத்தீவில் பாடசாலைக்கு சென்ற சிறுமிக்கு நேர்ந்த துயரம்...

user 21-May-2025 இலங்கை 111 Views

முல்லைத்தீவில் பாடசாலைக்கு சென்ற சிறுமி மீது பட்டா ரக வாகனம் மோதியதில் சிறுமி உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

முல்லைத்தீவு, கொக்கிளாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கருநாட்டுகேணி பகுதியில் இன்று (21) காலை 7 மணியளவில் பாடசாலைக்கு செல்லும் வழியில் குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மாணவி வீதிக்கு மறுபக்கத்தில் சென்று கொண்டிருந்த பணிஷ் வாகனத்தில் பணிஷ் ஒன்றை வாங்கிவிட்டு திரும்பி சென்றபோது கொக்குளாயிலிருந்து முல்லைத்தீவு நோக்கி சென்ற பட்டாரக வாகனம் மோதி விபத்தினை ஏற்படுத்தியுள்ளது.

விபத்தில் காயமடைந்த மாணவி முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

விபத்தினை ஏற்படுத்திய வாகனத்தின் சாரதியான புத்தளம் பகுதியினை சேர்ந்த நபரை கொக்கிளாய் பொலிஸ் கைது செய்துள்ளதுடன், விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

விபத்தில் எட்டு வயதுடைய மாதீஸ்வரன் நர்மதா என்ற தரம் மூன்றில் கர்நாட்டுகேணி அ.த.க பாடசாலையில் கல்விகற்கும் பாடசாலை மாணவியே உயிரிழந்துள்ளார்.

அத்தோடு பாடசாலையில் பொலிஸ் யாரும் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுவதில்லை எனவும் கர்நாட்டுக்கேணி மக்கள் விசனம் தெரித்துள்ளனர்.

Related Post

பிரபலமான செய்தி