ஏன் ஆந்திர, கேரளா, பாகிஸ்தான் கடலுக்கு செல்வதில்லை ?

user 22-Feb-2025 இலங்கை 70 Views

இலங்கை கடற்படையால் தமிழக கைது செய்யப்படுவதை இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கண்டித்துள்ளார்.

இதற்கு  இலங்கை கடற்றொழில் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் பதிலளித்துள்ளார். இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு கூறுகையில்,

கனிமொழியிடம் நாங்கள் மிக வினயமாக கேட்டுக்கொள்வது, உங்கள் மீனவர்களுக்கு எங்கள் எல்லையை மீற வேண்டாம் என்று சொல்லுங்கள்.

நீங்க பக்கத்துல இருக்கும் கேரள கடலுக்கு போவதில்லை பக்கத்தில் இருக்கின்ற ஆந்திர கடலுக்கு போவதில்லை பக்கத்துல இருக்கின்ற பாகிஸ்தான் கடலுக்கும் போவதில்லை ஆனால் எங்களுடைய கடல்தான் உங்களுக்கு தேவை.

எங்களுடைய மீன்கள் எல்லாத்தையும் பிடித்து எங்களுடைய வள்ளங்களை அறுத்து நொறுக்கி வலைகளை அறுத்து நாசமாக்கிவிடுகிறீர்கள். 20% ஆக இருக்கும் எங்கள் மீனவர்களுடைய வாழ்க்கையையும் நாசமாக்கிவிட்டு செல்கிறீர்கள்.

30 வருடங்களாக நாங்கள் யுத்தத்திற்கு முகம் கொடுத்த மக்கள் யுத்தத்தின் காரணமாக பாரிய பின்னடைவுகளை சந்தித்திருக்கின்றோம்.

இப்ப தான் ஓரளவு தலை தூக்கிக் கொண்டு வருகின்ற போது சீசன் டைம்ல வந்து உங்களுடைய ஆயிரக்கணக்கான படகுகள் எங்களுடைய கடல் வளத்தை மாத்திரமல்லாமல் (மீனவர்களின் வாழ்வாதாரத்தையும்) நாசமாக்கிக் கொண்டு போகின்றார்கள் என்றும் கடும் கண்டனத்தை வெளிப்படுத்தினார்.

அதேவேளை கடல் எல்லைகளைப் பாதுகாத்தல், மீன்வளத்தின் நிலைத்தன்மை மற்றும் இலங்கை மீன்பிடி சமூகங்களின் தேசிய வளங்கள் மற்றும் வாழ்வாதாரங்களைப் பாதுகாப்பதை உறுதி செய்யும் அதே வேளையில், சட்டவிரோத மீன்பிடி நடைமுறைகளைத் தடுக்க இலங்கை அரசாங்கம் இந்திய அதிகாரிகளுடன் தொடர்ந்தும் கலந்துரையாடல்களில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

 

Related Post

பிரபலமான செய்தி