நீண்ட நாட்களாக பொலிஸார் வலைவீசி வந்த யாழ்ப்பாண திருடன் அதிரடி கைது!

user 07-Jan-2025 இலங்கை 816 Views

யாழ்.வடமராட்சி - குடத்தனை, மாளிகைத்திடல் பகுதியை சேர்ந்த சந்தேகநபர் ஒருவர் மருதங்கேணி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தனியார் கம்பெனியின் சொத்துக்கள், ஆவணங்கள், தொலைபேசி மற்றும் ஒரு தொகை பணம் என்பவற்றை திருடிய சம்பவத்தின் சந்தேகத்தின் அடிப்படையிலேயே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

நீண்ட நாட்களாக பொலிஸார் வலைவீசி வந்த நிலையில் நேற்றிரவு  (05-01-2025) அதிரடியாக மருதங்கேணி பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

மேலும், கைது செய்ய சென்ற பொலிஸாரை தாக்கியதுடன் தப்பி ஓட முயன்றதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, பல குற்றச் செயல்களுடன் தொடர்புடைய குறித்த நபரை மருதங்கேணி பொலிஸார் தடுத்துவைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Post

பிரபலமான செய்தி