தமிழர் பகுதியில் இளம் குடும்பஸ்தருக்கு நேர்ந்த துயரம்...

user 25-Sep-2025 இலங்கை 60 Views

கிளிநொச்சியில் சிறப்பு அதிரடி படையினரிடமிருந்து தப்பிச்செல்ல முற்பட்ட சந்தேக நபர் கிணற்றில் தவறி விழுந்து பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இராமநாதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்றிரவு இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி இடம்பெறுவதாக சிறப்பு அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய,சந்தேக நபரை சிறப்பு அதிரடிப்படையினர் கைது செய்ய சென்றபோது, தப்பிச்செல்ல முற்பட்ட சந்தேக நபர் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

இராமநாதபுரம் பகுதியில் வசிக்கும் ஒரு பிள்ளையின் தந்தையான இளம் குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக இராமநாதபுரம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Post

பிரபலமான செய்தி