விஷ போதைப்பொருள் தொடர்பான தகவல்களை வழங்க பொதுமக்களுக்கு புதிய தொலைபேசி இலக்கங்களை பொலிஸார் அறிமுகப்படுத்தியுள்ளன.
அதன்படி, நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரவலாக காணப்படும் ஹெரோயின், ஐஸ், கோக்கேன் மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் தொடர்பான தகவல்களை, பொதுமக்கள் இந்த இலக்கங்கள் மூலம் நேரடியாக அறிவிக்கலாம்.
இன்று (03) முதல், சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர்களின் கீழ் உள்ள மாவட்டங்களுக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர்கள் மற்றும் பிரிவுகளுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களின் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு அத்தகைய தகவல்களை வழங்கலாம் என பொலிஸ் தெரிவித்துள்ளது.