உலக அஞ்சல் தினம் இன்றைய தினம் கொண்டாடப்படுகிறது.
இலங்கை அஞ்சல் துறையானது இன்றைய தினம் காலை 10.00 மணிக்கு பதுளை அஞ்சல் வளாக கேட்போர் கூடத்தில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி நளிந்த ஜெயதிஸ்ஸ தலைமையில் ஒரு தேசிய கொண்டாட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளது.
இந்த ஆண்டு 151 ஆவது உலக அஞ்சல் தினம் கொண்டாடப்படுகிறது.
மேலும் இது இந்த நாட்டில் கொண்டாடப்படும் 56 வது தேசிய கொண்டாட்டமாகும்.
இந்த நாட்டில் அஞ்சல் சேவை 227 ஆண்டுகால நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது.
உலகளாவிய அஞ்சல் ஒன்றியத்தால் எடுக்கப்பட்ட முடிவின்படி, உலகின் 193 நாடுகள் ஒவ்வொரு ஆண்டும் ஒக்டோபர் 9 ஆம் திகதியினை உலக அஞ்சல் தினமாக கொண்டாடுகின்றன.
1874 ஆம் ஆண்டு, உலகெங்கிலும் உள்ள பல நாடுகள் ஒக்டோபர் 9 ஆம் திகதி யுனிவர்சல் போஸ்டல் யூனியன் என்ற அமைப்பை நிறுவுவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
அதன்படி, அந்த நாள் 1969 இல் உலக அஞ்சல் தினம் என்று பெயரிடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.