மட்டக்களப்பு சிறை கைதிகளின் மனிதாபிமானம்!

user 06-Dec-2025 இலங்கை 23 Views

மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக் கைதிகளின் இரண்டு நாட்களுக்கான உணவில் ஒருவேளை உணவை நன்கொடையாக வழங்கியுள்ளனர்.

அதனை நாட்டில் இடம்பெற்ற வெள்ள அனர்த்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக உலர் உணவுப் பொருட்களாக நேற்று (05) கையளித்துள்ளனர்.

உணவுப் பொருட்கள் சிறைக் கைதிகளின் ஊடாக சிறைச்சாலை அத்தியட்சகருக்கு வழங்கப்பட்டு பின்னர் அவை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் அருள்ராஜிடம் சிறைச்சாலை அத்தியட்சகர் நல்லையா பிரபாகரனால் கையளிக்கப்பட்டன.

Related Post

பிரபலமான செய்தி