மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசனின் அதிரடி அறிவிப்பு !

user 11-Nov-2024 இந்தியா 452 Views

தன்னை ‘உலகநாயகன்’ என்றோ அல்லது அடைமொழி பட்டங்கள் கொடுத்தோ அழைக்க வேண்டாம் என தென்னிந்திய நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல் ஹாசன் (Kamal Haasan)  வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சமூக வலைத்தளமாக எக்ஸ் (x) ல் அறிக்கையொன்றை வெளியிட்டு இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த அறிக்கையில், “என் மீது கொண்ட அன்பினால் 'உலக நாயகன்' உட்பட பல பிரியம் ததும்பும் பட்டங்களால் என்னை அழைக்கிறீர்கள்.

மக்கள் கொடுத்து, சக கலைஞர்களாலும் ரசிகர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட இப்படிப்பட்ட பாராட்டுச் சொற்களால் மகிழ்ந்திருக்கிறேன். உங்கள் இந்த அன்பால் நெகிழ்ந்துமிருக்கிறேன். உங்களின் பிரியத்தின் மீது எனக்கு மாறாத நன்றியுணர்வும் உண்டு.

சினிமாக் கலை, எந்த ஒரு தனி மனிதனையும் விட பெரியது. அந்தக் கலையில் மேலும் மேலும் கற்றுக்கொண்டு பரிணாமம் அடைய விரும்பும் ஒரு மாணவன் தான் நான். பிற கலைகளைப் போலவே சினிமாவும் அனைவருக்குமானது; அனைவராலுமானது.

திறமையான கலைஞர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள், நல்ல ரசிகர்கள் ஒன்றிணைந்துதான் சினிமா உருவாகிறது.

Related Post

பிரபலமான செய்தி