தமிழரசுக் கட்சியின்(TNA) தேசியப் பட்டியல் தொடர்பிலான சர்ச்சை நிலைகள் தமிழ் தேசிய அரசியல் பரப்பில் தற்போது வலுப்பெற்று வருகிறது.
எனினும் தமது கட்சிக்கு கிடைத்த இரண்டு தேசியப்பட்டியல் ஆசனங்களுக்கான உறுப்பினர்களின் பெயர்களை அக்கட்சி வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் அந்த நியமனங்களில் ஒருவராக கருதப்படும் பா. சத்தியலிங்கத்தினது உள்வருகையானது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.ஏ சுமந்திரனின் திட்டமிடலின் ஒரு அங்கம் என்ற குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுகின்றன.
அந்த வகையில் லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் மா. இளம்பிறையன் தமிழரசுக் கட்சிக்குள் இடம்பெறும் பல்வேறு முரணான கருத்துக்களை எடுத்துரைத்திருந்தார்.
மேலும், சுமந்திரனின் கருத்திற்கு அமையவே செயலாளரின் நடவடிக்கைகள் இடம்பெறுவதாகவும், எதிர்வரும் காலங்களில் சத்தியலிங்கம் - சுமந்திரன் விவகாரம் மீண்டும் மீண்டும் தமிழரசுக்கட்சியை நீதிமன்றுக்கு அழைத்து செல்லும் எனவும் கூறியுள்ளார்.