யாழில் பக்கத்து வீட்டுகாரருக்கு பெண் நிகழ்திய கொடூரம் பொலிஸார் காட்டிய அதிரடி

user 01-Jan-2026 இலங்கை 63 Views

யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவன் தெற்கு பகுதியில் அயல்வீட்டுக்காரரை கத்தியால் குத்திய குற்றச்சாட்டில் பெண் ஒருவர் சுன்னாகம் பொலிஸாரால் நேற்று (31) கைதுசெய்யப்பட்டுள்ளார்.

காயமடைந்த அயல்வீட்டுக்காரர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பெண் தனது அயல்வீட்டுக்காரருடன் தொடர்ச்சியாக தகராறில் ஈடுபட்டு வந்த நிலையில் சம்பவத்தன்று அவரை கத்தியால் குத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

கைதுசெய்யப்பட்ட பெண்ணை மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த தேவையான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Post

பிரபலமான செய்தி