பிரித்தானியாவில் நிர்க்கதி நிலைக்கு தள்ளப்பட்டுள்ள புலம்பெயர் மக்கள் !

user 10-Dec-2024 சர்வதேசம் 844 Views

பிரித்தானியாவில் உள்ள புலம்பெயர்ந்தோருக்கான வீசா நீடிப்பு தொடர்பான சிக்கலில் 1000 பேர் நிர்க்கதி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

காலவரையறையின்றி பிரித்தானியாவில் வாழ அனுமதி கிடைப்பதற்கு முன்னதாக புலம்பெயர்ந்தோரில் பலர் 30 மாதங்களுக்கொருமுறை தங்கள் விசாவை நீடிப்பதற்காக விண்ணப்பிக்கவேண்டும் என கூறப்பட்டுள்ளது.

 இதற்கு பெரும்தொகை பணம் செலவாகும் நிலையில், பலருக்கு அந்நாட்டு உள்துறை அலுவலகத்திலிருந்து தங்கள் விண்ணப்பத்தின் நிலை குறித்து இன்னமும் பதில் வரவில்லை என பல  புலம்பெயர்ந்தோரால் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

பொதுவாக இத்தகைய விண்ணப்பங்களுக்கு உள்துறை அலுவலகம் எட்டு வாரங்களுக்குள் பதிலளிக்கவேண்டும் எனவும், தற்போது 1000ற்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர், தங்கள் விசா நீடிப்புக்காக விண்ணப்பித்துவிட்டு ஒரு வருடத்திற்கும் மேலாக காத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், விசா நீடிக்கப்படுமா இல்லையா என தெரியாத நிலையில், இவர்கள் தங்கள் வேலையை இழக்கவும், அவர்களுக்குக் கிடைக்கும் நிதி உதவிகள் இடைநிறுத்தப்படவும் வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

Related Post

பிரபலமான செய்தி