சமஷ்டி அடிப்படையிலான கோரிக்கையை முன்வைத்து திருகோணமலையில் போராட்டம்..

user 18-Aug-2025 இலங்கை 123 Views

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவினால் நடைமுறைப்படுத்தப்படும் 100 நாள் செயன்முனைவின் 18 ஆவது நாள் நிகழ்வு திருகோணமலை-பாரதிபுரம் கிராமத்தில் இன்று (18) இடம்பெற்றது.

பல வழிகளிலும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தம்பலகாம மக்கள் தொடர்ந்தும் பல உரிமை சார்ந்த பிரச்சனைகளை எதிர்நோக்கி வருகின்றனர்.

இன்றைய தினம் கூடிய மக்கள் ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணததிற்கு மீளப்பெற முடியாத அதிகார பகிர்வுடன் கூடிய சமஷ்டி முறையிலான அரசியல் தீர்வினை அரசிடம் வலியுறுத்தினர்.

இதன் போது இலங்கை அரசே இணைந்த வட கிழக்கு மாகாணத்துக்கு மீளப் பெற முடியாத சமஷ்டி முறையிலான அதிகார பகிர்வை உறுதி செய்க போன்ற வாசகத்தை ஏந்தியவாறும் கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து, ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த வடகிழக்கு ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் வடகிழக்கு மாகாணத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான தீர்வுகளை வலியுறுத்துகிறோம்.

வடகிழக்கு மாகாணத்துக்கு மீளப் பெற முடியாத நிரந்தர அரசியல் தீர்வை பெற்றுத் தாருங்கள் என இலங்கை அரசிடம் வலியுறுத்துகிறோம் எனத் தெரிவித்துள்ளார்.

Related Post

பிரபலமான செய்தி