உக்ரைன் மீது பயங்கர தாக்குதல்!

user 22-Nov-2024 சர்வதேசம் 157 Views

ஒலியை விட 10 மடங்கு வேகத்தில் பயணிக்கக்கூடிய ஏவுகணையை கொண்டு உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளதாக ரஷ்ய ஜனதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin) தெரிவித்துள்ளார்.

புடின் வெகுநாட்களாக பொதுவெளிகளில் தென்படவில்லை என்ற கருத்து பரவி வந்த நிலையில், இன்றையதினம் (21.11.2024) உக்ரைன் மீது ஏவுகணை தாக்குதலை நடத்தியதாக அவரே கூறியுள்ளார்.

மேற்கத்தைய நாடுகளிலிருந்து கொண்டுவரப்பட்ட ஏவுகணைகளை ரஷ்யா மீது உக்ரைன் பயன்படுத்தியதையடுத்தே, இந்த தாக்குதலை நடத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கும் மேற்கத்தைய நாடுகளையும் புடின் எச்சரித்துள்ளார்.

இந்நிலையில், குறித்த தாக்குதல் உக்ரைனின் டினிப்ரோ (Dnipro) நகர் மீது மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு 'ICBM' எனப்படும் கண்டம் விட்டு கண்டம் பாயக் கூடிய ஏவுகணை இதற்கு பயன்பட்டிருக்கலாம் என சந்தேகிப்பதாக உக்ரைனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி (Volodymyr Zelensky) தெரிவித்துள்ளார்.

இதன்போது, குறைந்தது 26 பேர் வரை காயமடைந்திருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.   

 

 

Related Post

பிரபலமான செய்தி