இந்திய நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் பின்னால் பாதுகாப்புக்காக நிற்கும், சிறப்பு பாதுகாப்புக் குழுவின் பெண் கொமாண்டோ வீராங்கனையின் புகைப்படம், சமூக ஊடகங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
இந்த புகைப்படத்தைப் பகிர்ந்தவர்களில் ஒருவரான, நடிகையாக இருந்து அரசியல்வாதியாக மாறிய கங்கனா ரணாவத், உயரடுக்கு பாதுகாப்பு பாத்திரங்களில் பெண்களின் பிரதிநிதித்துவத்தைப் பாராட்டியுள்ளார்.
இதனை புதிய செயலாக பலர் கருதினாலும், பல ஆண்டுகளாக பெண் SPG ( Special Protection Group) கொமாண்டோக்கள் சேவைகளில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த பெண் கொமாண்டோக்கள் பெரும்பாலும் பெண் பார்வையாளர்களை சோதனையிடும் செயற்பாடுகளில் ஈடுபடுகிறார்கள்.
அத்துடன், நுழைவிடங்களிலும்,பெண் விருந்தினர்கள் பிரதமரை சந்திக்கும் போதும், இவர்கள் செயற்படுகின்றனர். 2015ஆம் ஆண்டு முதல், பெண் கொமாண்டோக்களும் SPG என்ற சிறப்பு படை என்ற நெருக்கமான பாதுகாப்புக் குழுவில் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.