தித்வா சூறாவளியால் வீடுகளை இழந்த குடும்பங்களுக்கான 50 இலட்சம் ரூபா உதவித்தொகை

user 05-Jan-2026 இலங்கை 40 Views

தித்வா சூறாவளியால் வீடுகளை இழந்த குடும்பங்களுக்கான 50 இலட்சம் ரூபா உதவித்தொகையை இம்மாதத்தின் முதல் 10 நாட்களுக்குள் வழங்குவதற்கான நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

வீடுகளை முற்றாக இழந்தவர்கள் ஒரு வருடத்துக்குள் தமக்கான வீட்டை அமைத்துக்கொள்ள உதவுவதே அரசாங்கத்தின் நோக்கமாகுமெனவும் அவர் கூறினார்.மேலும் சேதமடைந்த வீதிகளில் 99 சதவீதமானவற்றை இயற்கை அனர்த்தம் இடம்பெற்று ஒரு மாதம் கடக்க முன்னரே தமது அரசாங்கத்தால் புனரமைக்க முடிந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை கடந்த இயற்கை அனர்த்தத்தின்போது மஹமன்கடவல குளம் பெருக்கெடுத்ததால் மஹமன்கடவல கிராமத்தில் 150 க்கும் மேற்பட்ட வீடுகள் நீரில் மூழ்கியிருந்ததாக அக்கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

Related Post

பிரபலமான செய்தி