வளிமண்டலவியல் திணைக்களத்தின் (Department of Meteorology ) உத்தியோகபூர்வ இணையத்தளம் மீண்டும் ஒருமுறை இன்று (04) ஊடுருவல் செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து, இணையதளத்தை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறுகிய காலத்தில் இணையதளம் ஊடுருவல் செய்யப்பட்ட இரண்டாவது சம்பவம் இதுவாகும்.
வானிலைத் துறையின் இந்த அதிகாரபூர்வ இணையதளம், முன்னர் நவம்பர் முதலாம் திகதியன்றும் ஊடுருவல் செய்யப்பட்டது.