விடுதலைப்புலிகளின் ஆயுதங்களை தேடியவர்களுக்கு ஏமாற்றம்

user 31-Jul-2025 இலங்கை 130 Views

  கிளிநொச்சியில் உள்ள தனியார் காணியொன்றில் விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் இருக்கலாம் என சந்தேகித்து மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப்பணி,இடைநிறுத்தப்பட்டுள்ளது.

கிளிநொச்சி - தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புன்னைநீராவி கிராம அலுவலர் பிரிவில் ஏ 35 பிரதான வீதியில் அருகே தனியார் காணி ஒன்றில், விடுதலைப் புலிகளின் ஆயுதம் இருப்பதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக இன்றைய தினம் அகழ்வுப்பணி இடம்பெற்றது.

கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதவான் இஸ்மாத் ஜெமீல் முன்னிலையில் பொலிசார், இராணுவத்தினர், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர், திணைக்களங்களின் உத்தியோகத்தர்கள் முன்னிலையில் அகழ்வுப்பணி மேற்கொள்ளப்பட்டது.

 எனினும் அகழ்வுப்பணியில் எந்தவித தடயங்களும் கிடைக்காத நிலையில் அகழ்வுப்பணியை நீதவான் இடைநிறுத்தியமை குறிப்பிடத்தக்கது.

Related Post

பிரபலமான செய்தி