நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் வீழ்த்தப்பட்ட பிரான்ஸ் அரசு !

user 05-Dec-2024 சர்வதேசம் 1251 Views

பிரான்ஸ் பிரதமர் மைக்கேல் பார்னியர் (Michel Barnier) மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி அடைந்துள்ளதால் ஆட்சி கவிழ்க்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த 60 ஆண்டுகளில் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு மூலம் பிரான்ஸ் அரசாங்கம் கவிழ்க்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.

இது ஒரு அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதுடன், அடுத்த ஆண்டுக்கான நாட்டின் வரவு செலவுத் திட்டம் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.

பிரான்ஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 577 உறுப்பினர்களில் 331 பேர் பார்னியர் அரசுக்கு எதிராக வாக்களித்தனர்.

இது ஜனாதிபதி இம்மானுவல் மெக்ரோனுக்கு (Emmanuel Macron) கடும் பின்னடைவாகவே பார்க்கப்படுகின்றது.

மேலும், வாக்கெடுப்பைத் தொடர்ந்து பார்னியர் இப்போது ஜனாதிபதி மெக்ரோனிடம் தனது பதவி விலகலை சமர்ப்பிக்க வேண்டும் என்று சபாநாயகர் Yael Braun Pivet தெரிவித்துள்ளார்.

இந்நிலையிவ், பிரான்ஸ் ஜனாதிபதி மெக்ரோனும் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளன.  

 

 

Related Post

பிரபலமான செய்தி