கனேடிய பொருட்களின் விலையில் அதிகரிப்பு !

user 11-Dec-2024 சர்வதேசம் 137 Views

கனடாவிலிருந்து (Canada) இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் மீது விதிக்கப்படவுள்ள வரியின் காரணமாக அவற்றின் விலை அதிகரிக்கும் என கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) எச்சரித்துள்ளார். 

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump), தான் ஜனாதிபதியாக பதவியேற்றதும், கையெழுத்திடும் முதல் ஆவணங்களில், கனடா, மெக்சிகோ முதலான நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிப்பது தொடர்பானது தான் என்று கூறியுள்ளார். 

இதனை தொடர்ந்து, கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது 25 சதவீத வரி விதிக்கப்படுமானால், அது கனடாவின் பொருளாதாரத்தைக் கடுமையாக பாதிக்கும் என்பதை மறுக்கமுடியாது என்று ஜஸ்டின் ட்ரூடோ குறிப்பிட்டுள்ளார். 

அதேநேரத்தில், கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது ட்ரம்ப் வரி விதிப்பாரானால், அந்தப் பொருட்களின் விலை கணிசமாக அதிகரிக்கும் என்னும் உண்மையை அமெரிக்கர்கள் உணர தொடங்கியுள்ளார்கள் என ட்ரூடோ தெரிவித்துள்ளார். 

அமெரிக்கா, ஸ்டீல் மற்றும் அலுமினியம் ஆகியவற்றை கனடாவில் இருந்து இறக்குமதி செய்வதுடன், கனடாவில் இருந்து தனது 65 சதவீதம் கச்சா எண்ணெயும், குறிப்பிடத்தக்க அளவிலான மின்சாரத்தையும் பெற்றுக் கொள்கின்றது.

அது மாத்திரமன்றி, கனடாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் மொத்த இயற்கை எரிவாயுவும் அமெரிக்காவுக்கே அனுப்பப்படுவதுடன் வேளாண்மைக்கான பொருட்கயும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. 

இந்நிலையில், கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மேற்குறிப்பிட்ட அனைத்து பொருட்கள் மீதும் அமெரிக்கா 25 சதவிகித வரி விதிக்குமானால், அமெரிக்காவில், அவை அனைத்திற்குமான விலைகளும் கணிசமாக அதிகரிப்பதுடன் அந்நாட்டில் பொருளாதார சிக்கலும் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

 

Related Post

பிரபலமான செய்தி