நானே தமிழரசுக் கட்சியின் பேச்சாளர் !

user 15-Dec-2024 இலங்கை 1509 Views

 இலங்கை தமிழரசுக் கட்சியில் இருந்து சிலர் நீக்கப்படுவதுடன், சிலர் இடைநிறுத்தப்படுவர் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தொிவித்துள்ள நிலையில்,  விலகி செயற்பட்டவர்களை நீக்குவதாக ஏகமனதாக தீர்மானிக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்துள்ளார்.

மேலும், நானே தமிழரசுக் கட்சியின் பேச்சாளர் எனவும் அவர் பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இடம்பெற்ற தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரவித்த அவர்,

“இன்றைய கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலில் பல விடயங்கள் இருந்தன. ஆனாலும் ஒரு விடயம் ஆராயப்பட்டது. தமிழரசுக் கட்சி தலைவரின் பதவி விலகல் கடிதம் தொடர்பாக வாதப் பிரதி வாதங்கள் இடம்பெற்றன.

அந்த கடிதத்தை மாவை சேனாதராஜா அனுப்பியதன் பின்னர் பதவி விலகல் கடிதத்தில் இருந்து மீள பெறுவதாக சொல்லியிருந்தார்.

மீண்டும் தலைவராக இருப்பதற்கான சம்மதத்தை தெரிவித்து இருந்தார். அது தொடர்பாக எமது கட்சி உறுப்பினர்கள் மத்தியில் இரண்டு கருத்துக்கள் இருந்தன. அதன் அடிப்படையில் அவர் பதவி வகிக்க வேண்டும் என்ற ஒரு கருத்தும், கடிதம் கொடுத்தன் பிரகாரம் பதவியில் இருந்து விலக வேண்டும் என்ற ஒரு கருத்தும் இருந்தது” என்றார்.

 

 

 

Related Post

பிரபலமான செய்தி