இந்த ஆண்டின் உலகின் சிறந்த நபராக ட்ரம்ப் தெரிவு செய்ய்பட்டுள்ளார் என டைம்ஸ் சஞ்சிகை அறிவித்துள்ளது.
இரண்டாவது தடவையாக டைம்ஸ் சஞ்சிகை ட்ரம்பிற்கு இந்த அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.
இதற்கு முன்னதாக 2016ம் ஆண்டில் உலகின் சிறந்த நபராக ட்ரம்ப் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
வரலாற்று ரீதியான அரசியல் மீள் பிரவேசம் மற்றும் ஜனாதிபதியாக மீண்டும் தெரிவானமை போன்ற விடயங்கள் ட்ரம்பின் ஆளுமையை வெளிப்படுத்துவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
1927ம் ஆண்டு முதல் இந்த விசேட அங்கீகாரத்தை டைம்ஸ் சஞ்சிகை வெளியிட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
உலகின் அந்த ஆண்டில் சாதகமான அல்லது பாதகமான வழியில் மிகவும் பாரிய தாக்கத்தை செலுத்திய நபரை, ஆண்டின் சிறந்த நபராக டைம்ஸ் சஞ்சிகை அங்கீகரித்து வருகின்றது.
சுற்றாடல் ஆர்வலர் கிரேட்ட தொர்ன்பர்க், அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பரக் ஒபாமா, மெட்டாவின் தலைமை நிர்வாகி மார்க் சர்க்கர்பர்க், உக்ரைன் அதிபர் வொளொடிமிர் செலென்ஸ்கீ மற்றும் பாப்பாண்டவர் முதலாம் பிரான்ஸிஸ் போன்றவர்கள் கடந்த காலங்களில் இந்த அங்கீகாரத்தை பெற்றுக்கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.