புதிய வட்ஸ்அப் எண்ணை அறிமுகப்படுத்தியுள்ள தொழில் அமைச்சு !

user 02-Jan-2025 இலங்கை 1326 Views

மக்களின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் தொழில் அமைச்சால் (Ministry of Labour) புதிய வட்ஸ்அப் (Whatsapp) எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த 070 722 7877 புதிய வாட்ஸ்அப் எண் அதன் சேவைகளை மேலும் திறம்படச் செய்யும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த முன்முயற்சியானது சேவைகளை நெறிப்படுத்துவதையும், பொது மக்கள் தங்கள் கோரிக்கைகளை எளிதாக சமர்பிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

மேலும், இந்த வாட்ஸ்அப் எண் தனியார் மற்றும் அரை அரசு ஊழியர்கள் (Semi Government) எதிர்கொள்ளும் சேவை தொடர்பான பிரச்சினைகளை உடனடியாக தீர்க்கும் நோக்கம் கொண்டது என்றும் அமைச்சகம் கூறியுள்ளது.

Related Post

பிரபலமான செய்தி