அமெரிக்காவுக்கு எதிராக விளாடிமிர் புட்டினின் உத்தரவு !

user 20-Nov-2024 இலங்கை 193 Views

உக்ரைன் போரில் அணு ஆயுதங்களைப் பயன்படுத்த அனுமதிக்கும் உத்தரவில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் கையெழுத்திட்டுள்ளார்.  

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் ஒப்புதலுடன் ரஷ்யாவின் மீது உக்ரைன் நீண்ட தூர ஏவுகணைகளை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியதையடுத்தே புட்டினின் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த தாக்குதல் ரஷ்யாவின் எல்லைப் பகுதியில் மேற்கத்திய நாடுகள் வழங்கிய நீண்ட தூர ஏவுகணைகளை பயன்படுத்தி நடத்தப்பட்டுள்ளது.

இது ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையேயான மோதலில் தீவிரநிலையை தோற்றுவித்துள்ளது.  

கடந்த 2022ஆம் ஆண்டு உக்ரைன் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு இடையிலான போர் ஆரம்பமானது. இந்தப்போரில், முதலில் ரஷ்யா வெற்றி பெறும் என்பது போலத் தெரிந்தாலும், உக்ரைனின் எதிர்த் தாக்குதல்கள் யுத்தக்கள நிலைமையை மாற்றி விட்டன.

ரஷ்யாவைச் சமாளிக்க உக்ரைனுக்கு உலக நாடுகள் உதவின. குறிப்பாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் தொடர்ந்தும் ஆயுதங்களை வழங்கி வருகின்றன.

இந்தநிலையில், அமெரிக்கா, ஆயுதங்களை வழங்கினாலும், அவற்றை தமது விருப்பப்படி, உக்ரைனால் பயன்படுத்த முடியவில்லை.

ரஷ்யத் தாக்குதல்களுக்கு எதிராக தங்களைத் தற்காத்துக் கொள்ள மட்டுமே, அமெரிக்க ஆயுதங்களை உக்ரைன் பயன்படுத்தி வந்தது. எனினும், கடந்த சில நாட்களுக்கு முன்னர், தனது நீண்ட தூர ஏவுகணைகளை, ரஸ்யாவுக்கு எதிராக பயன்படுத்த உக்ரைனுக்கு அமெரிக்கா அனுமதி அளித்தது.

இதனையடுத்து, உக்ரைனும் தூர ஏவுகனைகளை கொண்டு தாக்குதல்களை ஆரம்பித்த நிலையிலேயே புட்டினின், அணு ஆயுத செய்தி வெளியாகியுள்ளது.

குறிப்பாக, தமது ஏவுகணைகளைக் கொண்டு ரஷ்யாவின் உட்பகுதிகளுக்கும் கூட சென்று தாக்குதல் நடத்த அமெரிக்கா, உக்ரைனுக்கு அனுமதி அளித்துள்ளது.

இது, தமது தேசியப் பாதுகாப்பிற்குப் பிரச்சினையை ஏற்படுத்துவதால், தமது நாடு, எதிர் நடவடிக்கையை எடுத்துள்ளதாக ரஷ்ய பேச்சாளர் ஒருவர் அறிவித்துள்ளார்.   

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Related Post

பிரபலமான செய்தி