ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவிற்குச் சொந்தமான சொகுசு வாகனத்தில் வெடிபொருட்கள் எதற்காக கொண்டு செல்லப்பட்டன என்பதை அடையாளம் காண விசாரணைகள் தீவிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவிற்குச் சொந்தமான சொகுசு ஜீப்பில் குறித்த வெடிப்பொருக்கள் நேற்றைய தினம் கண்டுப்பிடக்கப்பட்டிருந்தன.
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கண்காணிப்புபணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் குழு நடத்திய சோதனையின் போது இந்தக் கைது இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
சம்பந்தப்பட்ட ஜீப்பில் இருந்து வெடிபொருட்கள், கம்பிகள் மற்றும் ஒரு வகை திரவம் அடங்கிய மூன்று போத்தல்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.