ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் ஆட்சியின் புதிய அமைச்சரமை சற்று முன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய நிதி, பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் அமைச்சராக சமகால ஜனாதிபதி அநுகுமார திசாநாயக்க பதவியேற்றுள்ளார்.
பிரதமராக கலாநிதி ஹரினி அமரசூரிய பதவியேற்றுள்ளார்.
கல்வி, தொழிற்கல்வி மற்றும் உயர் கல்வி அமைச்சராக பிரதமர் ஹரினி அமரசூரிய பதவியேற்றுள்ளார்.
வெளிவிவகாரம் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு, சுற்றுலாத்துறை அமைச்சராக விஜித ஹேரத் பதவியேற்றுள்ளார்.
பொது நிர்வாக மாகண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சராக கலாநிதி சந்தன அபேரத்ன பதவியேற்றுள்ளார்.
நீதி, தேசிய ஒருமைப்பாட்டு சட்டத்தரணி ஹர்சன நாணயக்கார பதவியேற்றுள்ளார்.